முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

மக்களின் நலன் கருதி தலவாக்கலை வர்த்தகர்கள் செயற்பட வேண்டும்! ; பொது மக்கள் விசனம்

அரசாங்கத்தினால் கடந்த வாரம் 16 அத்தியவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டன. நாட்டு மக்களின் நலன் கருதியே அரசினால் இக்கட்டுப்பாட்டு விலைகள் அமுல்படுத்தப்பப்டன. இருப்பினும் தலவாக்கலை நகரிலுள்ள 95% மான வர்த்தக நிலையங்களில் இன்று குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அமுலாக்கப்படவில்லையென குற்றஞ் சாட்டப்படுகிறது. 1 kg சீனி ரூ. 120 1 kg பருப்பு ரூ. 180 1 kg மா ரூ. 95 இவ்வாறே ஏனைய பொருட்களும் பழைய விலைகளுக்கே விற்கப்பட்டு வருகின்றன. தம்மிடம்...
Read More

ராகலையில் ஆசிரியையின் காதல் முறிந்தது; மாணவன் தற்கொலை முயற்சி!

ராகலை பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் உயர்தர வகுப்பு மாணவன் ஒருவன் மீது காதல் கொண்டு ஏமாற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட இளம் ஆசிரியை மாணவனுடன் உல்லாசமாக கொழும்பு உட்பட பல இடங்களுக்கு உல்லாசமாக சென்றுள்ளார். அது மாத்திரமன்றி குறித்த பெண் ஆசிரியை மாணவனோடு மிகவும் நெருக்கமாக பழகி யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியை திடீரென தனக்கு பெண் பார்த்து இருப்பதாகவும் தன்னை மறந்து விடுமாறும் கூறியுள்ளார் இதை ஏற்க மறுத்த மாணவன் ஆத்திரமடைந்து அதிக எண்ணிக்கையான...
Read More

தலவாக்கலை – வட்டகொட , மடக்கும்புற பகுதிக்கான இ.போ.ச. பஸ் சேவையை சீராக்க கோரிக்கை!

இலங்கை போக்குவரத்து சபையின் அட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ் சேவை சில சீரற்ற சேவையை வழங்கி வருவதால் பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . தினமும் மாலை 6.30 மற்றும் 6.55 மணிக்கு தலவாக்கலையிலிருந்து வட்டகொட , மடக்கும்புற ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரச பேருந்துகள் அண்மைக் காலமாக சீராக இன்மையால் பயணிகள் கூடுதலான பணத்தை கொடுத்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர் . குறிப்பாக கட வுச்சீட்டை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள், தொழிலை முடித்து வீடு...
Read More

மகளிருக்கான கிரிக்கெட் போட்டி ஜுலை 31ம் திகதி!

அடையாளம்’ சிவில் அமைப்பு ‘தாமரைக் குளம்’ பதிவர் சங்கத்துடன் இணைந்து வருடாந்தம் நடாத்தும் மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி இவ்வருடம் இரண்டாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணம்’ என்று பெயர் சூட்டப்பட்டு எதிர்வரும் ஜுலை 31ம் திகதி நானுஓயா தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் காலை 8 மணி தொடக்கம் போட்டி இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற முன்பதிவு செய்தவர்கள் மற்றும் புதிய அணிகள் மைதானத்திற்கு 9 மணக்கு முன்னர்...
Read More

வெகு விரைவில் அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க தீர்மானித்த ரூபா 2500 வழங்கப்படும்! ; அமைச்சர் இராதா

வெகு விரைவில் அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க தீர்மானித்த ரூபா 2500.00 வழங்கப்படும் கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் அவர்கள். கேகாலை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததினால் பாதிக்கபட்ட மக்களை சந்திபதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளிப்பதற்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் லெவல தோட்ட தமிழ் பாடசாலைக்கான விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டிருந்த போது அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பானம் இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன்...
Read More

“கபாலி” திரைப்படம் நாளை மலேசியாவில் பிரமுகர்களுக்கான வெளியீடு கல்வி இராஜாங்க அமைச்சருக்கும் அழைப்பு!

உலகளாவிய ரீதியில் கபாலி திரைப்படம் நாளை மறுதினம் (22) வெளியிடப்பட இருக்கும் நிலையில் நாளை (21) மலேசியாவில் பிரமுகர்களுக்காக வெளியிடப்பட உள்ளது. இப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேஷியாவியே இடம்பெற்றுள்ளது. அதனால் இந்த படம் திரையிடுவதற்கு முன்னதாக நாட்டின் பிரமுகர்களுக்கு காண்பிக்கப்படுகின்றது. இதற்கு ஆசிய பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளின் முன்பள்ளி மற்றும் பிள்ளைகள் பராமரிப்பு கல்வி தொடர்பான மாநாட்டுக்கு மலேஷியா சென்றுள்ள இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகில் படமொன்று...
Read More

தோட்ட நிர்வாகம் பெயர் பதியும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்! : செபஸ்டியன் பிலிப்குமார்

தோட்டப்பகுதிகளில் புதிதாக திருமணம் முடித்து வேறு தோட்டங்களுக்கு இடம்மாறி செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு தேயிலை தொழிலை விரும்பும் பட்சத்தில் உடனடியாக அத்தோட்ட நிர்வாகம் பெயர் பதியும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதை விடுத்து பெயர் பதிவதில் இழுத்தடிப்பு நடவடிக்கையை கையாளும் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் தயாராக வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்க பொதுச்செயலாளர் செபஸ்டியன் பிலிப்குமார் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது. பெருந்தோட்ட...
Read More

அட்டனில் திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய கிளையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்! : கணபதி கனகராஜ்

மலையக மாணவர்களிடையே தற்போது பல்கலைக்கழக கல்வியில் நாட்டம் செலுத்தம் ஆர்வம் அதிகரித்து வருகின்றது. அதனால் அதற்கான வாய்ப்பை மலையக மாணவர்களுக்கு நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் அட்டன் கல்வி வலயத்தின் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பொது தராதரப்பத்திர உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய போது தொரிவித்தார். பாடசாலை அதிபர் திருமதி குமாரசிரி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்...
Read More

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக கடன்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2500 ரூபா வீதம், இரண்டு மாத இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்கள் திறைசேரியிடம் இருந்து கடனை பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில் குறைந்தவட்டியுடன், ஒரு பில்லியன் ரூபாவை கடனாக பெறவுள்ளதாகவும், பெருந்தோட்ட நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கான உடன்படிக்கையை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரவுசெலவு திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனியாருக்கான நாள் ஒன்றுக்கு 100 ரூபா அதிகரிப்பு என்ற அடிப்படையிலேயே இந்த 2500 ரூபா கொடுப்பனவை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளன. இந்த நிலையில் அரச...
Read More
error: Content is protected !!