டயகம பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சந்திப்பொன்று அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் சுப்பிரமணியம் கதிர்செல்வன் தலைமையில் 08.07.2018அன்று டயகம நகரமண்டபத்தில்இடம்பெற்றது.
இதன் போது முச்சக்கரவண்டி சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக சபை தலைவரிடம் இவ்வாறான விடயங்களை முன்வைத்தனர் முச்சக்கரவண்டி நிறுத்துவதற்கான இடம் அபிவிருத்தி வீதி ஒழுங்கு விதிகள் பிரதேச சபையுடாக வழங்க கூடிய சேவைகள் என பல்வேறு விடயங்கள் முன் வைத்தனர்.
இக்கலந்துரையாடலின் போது சபை தலைவர் தெரிவிக்கையில் இன்று அதிகமானவர்கள் குடும்ப வருமானமாகவும் சொந்த தொழிலாக முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலை நம்பியுள்ளனர்.
இது இவ்வாறு இருந்தாலும் இவர்கள் மேற்கொள்ளும் தொழில்களில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பது எங்களின் பொறுப்பாகும்
எனவே முச்சக்கர வண்டி சாரதிகள் முன்வைதுள்ள பிரச்சினைகளுக்கு கட்டாயம் தீர்வினை பெற்றுகொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேவேளை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் அவரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் ஆலோசனையுடன் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என இவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் டயகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சுப்பிரமணியம் திருமதி ரதிதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அக்கரப்பத்தனை நிருபர்