முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தாக்குதல் ; 80 ஆக உயர்ந்தது உயிர்ப்பலி!

காபூல் – நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களிடையே நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 231க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏறத்தாழ 10,000 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த கூட்டத்தில் இரண்டு தற்கொலைத் தாக்குதல்காரர்கள் தங்களின் உடைகளில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் ஆப்கானிஸ்தானின் பூர்வீக மக்களான ஹசாராஸ் எனப்படுபவர்களாவர். இவர்களில்...
Read More

இளவரசர் ஜார்ஜ் பிறந்தாள் விழா: நாய்க்கு ஐஸ்கிரீம் ஊட்டியதால் சர்ச்சை!

லண்டன் – இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியரின் மூத்த மகனான குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு 3 வயது நிறைவு பெற்றதையடுத்து, அவரது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக, அதில் ஒரு படத்தில் ஜார்ஜ், வளர்ப்பு நாய் ஒன்றிற்கு ஐஸ்கிரீமும், சாக்லேட்டும் ஊட்டுவது போல் உள்ளது. அதைக் கண்ட விலங்குகள் ஆர்வலர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விலங்குகளுக்கு பால்...
Read More

துருக்கி இராணுவப் புரட்சி முடிவுக்கு வந்தது: 42 பேர் மரணம்!

அங்காரா – துருக்கியில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கிய இராணுவத்தில் ஒரு பிரிவு அதனை நிறைவேற்ற முடியாமல் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், புரட்சியில் ஈடுபட்டவர்களில் 50 இராணுவ வீரர்கள் சரணடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இஸ்தான்புல் காவல்துறைத் தலைமையகத்தைக் கைபற்றும் அவர்களின் முயற்சி தோல்வியடைந்ததாக அங்கிருக்கும் மாணவர்கள் ஸ்டார் இணையதளத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்தச் சம்பவத்தில் அங்காராவில் 47 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 17 பேர் காவல்துறையினர் என அந்நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் கூறுகின்றது.

துருக்கி இராணுவப் புரட்சி – பதைபதைக்கும் நிமிடங்களின் தொகுப்பு!

அங்காரா – துருக்கியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஓர் இராணுவப் புரட்சியின் மூலம், நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற இராணுவத் தரப்புகள் முயற்சிகளில் ஈடுபட்டன. தற்போது நிலமை கட்டுப்பாட்டில் இருப்பதாக துருக்கி பிரதமர் அறிவித்துள்ளார். இஸ்தான்புல் நேரப்படி அந்த பதட்டமான நிமிடங்கள் இதோ: 19.29 – இஸ்தான்புல் போஸ்போரஸ் மற்றும் ஃபாத்தி சுல்தான் மெஹ்மெட் பாலங்கள் மூடப்பட்டன. இதனை நேரில் கண்ட மலேசிய மாணவர்கள் ஸ்டார் இணையதளத்திடம் தெரிவித்துள்ளனர். 19.50 – அங்காராவில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதோடு, இராணுவ விமானங்கள்...
Read More

இணையத்தைக் கலக்கிய ‘தங்கமனிதர்’ கல்லால் அடித்துக் கொலை!

புனே – சுமார் ஒன்றரை கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து இணையத்தைக் கலக்கிய புனேவைச் சேர்ந்த ‘தங்கமனிதர்’ தத்தாத்ரே புஜே, கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 3.5 கிலோ எடையுடன், 22 காரட் தங்கத்தினால், 15 கலைஞர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட தங்க சட்டையை அணிந்து வலம் வந்தார் தத்தாத்ரே. உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த சட்டையாக அது கருதப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நிகழ்ச்சி ஒன்றில்...
Read More

சுவாதியைக் கொன்றது ஏன்? – காவல்துறையின் கேள்விகளுக்கு ராம்குமார் பதில்!

இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில், ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ராம்குமாரை சிறையில் சென்று பார்த்த வழக்கறிஞர் தரப்பு, கொலை நடந்த சமயம் தான் மேன்சனில் இருந்ததாக ராம்குமார் தங்களிடம் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக ராம்குமாரை காவல்துறை விசாரணை செய்து வருகின்றது. அவ்விசாரணையில் ராம்குமார் கூறியதாக தற்போது வெளிவரும் தகவல் என்னவென்றால், தான் காதலை வெளிப்படுத்தியபோது, தன்னை தேவாங்கு...
Read More

நீஸ் தாக்குதல்: ஐஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

கெய்ரோ – நேற்று வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) நகரில் மக்கள் திரளாகத் திரண்டு பாஸ்டில் (Bastille Day) திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் புகுந்த பெரிய வாகனம் ஒன்று நெரிசல் மிகுந்த மக்கள் மீது செலுத்தப்பட்டதில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் நட்பு ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர். “பிரான்சின் நீசில் கொல்லப்பட்ட பிரஞ்சு சிலுவைப் போராளிகள் மற்றும் பாவப்பட்ட இஸ்லாமல்லாதவர்ககளின் எண்ணிக்கை 62-ஐத்...
Read More

பிரான்ஸ் திருவிழாவில் வாகனம் மக்களை மோதி 73 பேர் பலி!

நீஸ் – நேற்று வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) நகரில் மக்கள் திரளாகத் திரண்டு பாஸ்டில் (Bastille Day) திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் புகுந்த பெரிய வாகனம் ஒன்று நெரிசல் மிகுந்த மக்கள் மீது செலுத்தப்பட்டதில் இதுவரை 73 பேர் பலி. இது ஒரு பயங்கரவாதச் செயல் என வர்ணிக்கப்பட்டுள்ளது. வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் உடனடியாக பிரான்ஸ் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். வாகனத்தைச் செலுத்தியவன் ஒருவன் மட்டும்தான் என்றும் அவன்...
Read More

“சுவாதி கொலையான நேரத்தில் நான் மேன்சனில் இருந்தேன்” – ராம்குமார் தகவல்!

சென்னை – இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டம், செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ராம்குமார், நேற்று மனம் திறந்து பேசியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள், நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்துப் பேசியுள்ளனர். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில் ராம்குமார் சில தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறியுள்ளனர். ராம்குமார் அவர்களிடம் கூறியிருப்பதாவது:- “நான் தங்கியிருந்த மேன்சனுக்கு அருகிலேயேதான்...
Read More

காஷ்மீரில் பதட்டம் – 30 பேர் பலி! 5000 தமிழர்கள் சிக்கியுள்ளனரா?

ஸ்ரீநகர் – காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாஹிடின் போராளி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்த நிகழ்ந்து வரும்   கலவரங்களால் இதுவரை 30 பேர் இறந்துள்ளனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களின் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் அடங்குவர். இதற்கிடையில் காஷ்மீரில் பாகிஸ்தான் அரசாங்கம் கலவரத்தைத் தூண்டி விடுகின்றது என இந்திய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதரை அழைத்து பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சு விளக்கம் கேட்டுள்ளது. 5,000...
Read More

ஆஸ்திரேலியா தேர்தல்: பிரதமர் டார்ன்புல் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

மெல்பெர்ன் – ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து எட்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டார்ன்புல் தான் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்படுவது இன்னும் நிறைவு பெறாத சூழ்நிலையில், தனது தேசிய -லிபரல் கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைக் கைப்பற்றிவிடும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!