முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

நீச்சல் குளத்தின் கண்ணாடிச் சுவர் உடைந்து விழுந்தது – சிங்கப்பூரில் சம்பவம்!

சிங்கப்பூர் – சிங்கப்பூரில் நேற்று ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 5 -வது மாடியில் இருந்த நீச்சல் குளத்தின், கண்ணாடியால் ஆன பக்கவாட்டுச் சுவர் உடைந்து விழுந்ததில், 5-வது மாடியில் இருந்து தண்ணீர் அருவி போல் கொட்டியது குடியிருப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

தைபே இரயிலில் குண்டுவெடிப்பு – 24 பேர் காயம்!

தைபே (தைவான்) – தைவான் தலைநகர் தைபேயில் நேற்று இரவு இரயில் ஒன்று ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 24 பேர் காயமடைந்துள்ளனர். தைவான் நேரப்படி, நேற்று இரவு 10 மணியளவில் தைபேயின் சொங்ஷான் பகுதி இரயில் நிலையத்தில், இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த இரயில் தைபேயில் இருந்து தைவானின் வடக்குப் பகுதியான கீலுங் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் கையில் இரயில் பெட்டிக்குள் பெரிய பை ஒன்றை...
Read More

டாக்காவில் மீண்டும் குண்டுவெடிப்பு!

டாக்கா: இன்று காலை டாக்காவுக்கு அருகில் உள்ள கிஷோர்காஞ்ச் என்ற இடத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த இறுதி நிலவர செய்திகள்: இரண்டு பேர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் போலீஸ்காரர், மற்றொருவன் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி! ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலாகும் இது! போலீஸ் வாகனங்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. டாக்காவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாக்குதல் நடத்தப்பட்ட கிஷோர்காஞ்ச் என்ற இடம். ஈத் பெருநாள் தொழுகையை நடத்திய மதகுருவைக்...
Read More

தெரசா மே பிரிட்டன் பிரதமர் தேர்வில் முன்னணி!

இலண்டன் – பதவி விலகிச் செல்லும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்குப் பதிலாக கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்புகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆகக் கடைசியான தகவல்களின்படி, தெரசா மே முன்னணி வகிக்கின்றார். இவர் பிரிட்டனின் நடப்பு உள்துறை அமைச்சராவார். முதலில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த தெரசா மே, தற்போது மக்கள் தீர்ப்பின்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் என...
Read More

கட்டிடத்திலிருந்து நாயை வீசி எறிந்து கொன்ற மனித மிருகம்!

சென்னை – உயரமான கட்டிடத்தின் உச்சியில் இருந்து நாய் ஒன்றை, மர்ம நபர் ஒருவர் தூக்கி வீசியெறியும் காணொளி, தற்போது வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நாயைத் தூக்கி எறிவதற்கு முன்பு அவர் கேமராவிற்கு போஸ் கொடுத்திருப்பது விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் மத்தியில் கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மிருகத்தனமாக நடந்து கொண்ட அந்நபரைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் சில அமைப்புகள் அறிவித்துள்ளன....
Read More

இந்தோனிசிய காவல்நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்!

ஜகார்த்தா – இந்தோனிசிய நகரான சோலோவில் இன்று செவ்வாய்கிழமை, காவல்நிலையம் ஒன்றில், இருசக்கர வாகனத்தில் நுழைந்த தீவிரவாதி ஒருவன், நடத்தியத் தற்கொலைத் தாக்குதலில், அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். ஜாவா தீவில் அந்நாட்டு நேரப்படி காலை 7.35 மணியளவில், காவல்நிலையத்தின் வளாகத்திற்குள் அந்நபர் தனது இருசக்கரவாகனத்தில் அத்துமீறி நுழைந்ததாக காவல்துறைத் தரப்பில் பாய் ராப்லி அமர் தெரிவித்துள்ளார். “அவன் காவல்நிலையத்தின் உணவகத்திற்குள் நுழைய வேண்டும் என்று எண்ணினான். வலுக்கட்டாயமாக அந்த முயற்சியைச் செய்த அவன், இறுதியில் தன்னைனை வெடிக்கச்...
Read More

சவுதி அரேபியா: 24 மணி நேரத்தில் 3 தற்கொலைத் தாக்குதல்கள்!

ஜெட்டா – சவுதி அரேபியாவின் மூன்று வெவ்வேறு நகர்களில் கடந்த 24 மணி நேரத்தில் அடுக்கடுக்கான மூன்று பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முதல் இரண்டு தாக்குதல்களில் யாரும் பாதிப்படையவில்லை. ஆனால், சவுதி அரேபியாவின் இராணுவத்தையும், மேற்கத்திய நாடுகளின் நலன்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் முஸ்லீம்களின் புனிதப் பெருநாளான நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவிருக்கும் வேளையில் இந்தத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. முதலாவது தாக்குதல், செவ்வாய்க்கிழமை அதிகாலைக்கு முன்னதாக ஜெட்டாவில்...
Read More

தேவாங்கு போல் இருப்பதாகத் திட்டினார் சுவாதி – ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை – இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ராம்குமார், தற்போது உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையின் விசாரணையில் சுவாதியைக் கொலை செய்ததன் காரணம் என்னவென்று ராம்குமார் கூறியிருப்பதாவது:- “நான் ஆலங்குளம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தேன். படிக்கும்போதே பேஸ்புக் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அப்படி தான் சுவாதியும் எனக்கு அறிமுகம் ஆனார்.” “பின்னர் வாட்ஸ்அப் மூலம் அவருடன் தொடர்பு கொண்டேன். அடிக்கடி அவருக்கு வாட்ஸ்அப்...
Read More

டாக்கா தாக்குதல்: இரு இலங்கையர்கள் உட்பட பிணைக்கைதிகளில் 12 பேர் மீட்பு!

டாக்கா – வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கய்டா தீவிரவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. உணவகத்தினுள் தீவிரவாதிகளின் பிடியில் பலர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போதைய தகவலின் படி, 1. இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. 2. அவர்களில் இலங்கையைச் சேர்ந்த இருவர் மீட்கப்பட்டு விட்டதாக இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 3. உணவகத்தின் உள்ளே கொடூரமாகக் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை...
Read More

41 பேர் பலி – 239 பேர் காயம் : இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது!

இஸ்தான்புல் – புதன்கிழமை அதிகாலை மும்முனைகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்தான்புல் நகரின் அதாதுர்க் விமான நிலையத்தின் ஒரு பகுதி இன்று மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். 239 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 109 பேர் சிகிச்சைகளுக்குப் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து இல்லம் திரும்பினர். இறந்தவர்களில் 13 பேர் வெளிநாட்டவர்களாவர்.

இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! 36 பேர் பலி! 147 பேர் படுகாயம்!

இஸ்தான்புல்: துருக்கிய நேரப்படி புதன்கிழமை காலை இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயம் அடைந்தவர்களில் 6 பேர் மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். 3 பேர் கொண்ட தற்கொலைப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தினர். மூவரும் உயிரிழந்துள்ளனர். தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் பின்னணியில் ஐஎஸ் இயக்கம் இருக்கலாம் என சந்தேகிப்பதாக துருக்கியப் பிரதமர் தெரிவித்துள்ளார். விமான நிலையத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் பீதியோடும், அலறலோடும், காயங்களோடு, விமான நிலையத்தை விட்ட வேகம் வேகமாக ஓடி வெளியேறினர்....
Read More
error: Content is protected !!