முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

“ரெமோ” – பெண் வேடத்தில் கவரும் சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் படத்தின் மூலம் வசூலிலும், புகழிலும் உச்ச நட்சத்திரமாகிவிட்ட சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘ரெமோ’. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கின்றார் என்பதும் மற்றொரு சிறப்பம்சம். நேற்று ‘ரெமோ’ படத்தின் முதல் தோற்றப் புகைப்படங்களும், முன்னோட்டமும் வெளியிடப்பட்டுள்ளன. யார் இது தெரிகிறதா? நம்ம சிவகார்த்திகேயன்தான்! ரெமோ படத்திற்காக அவர் எடுத்திருக்கும் புதிய அவதாரம்! பெண் நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் தோன்றுவது படம் குறித்த எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கின்றது. ‘ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி...
Read More

கபாலி – 7 மொழிகளில் வெளிவரப்போகும் முதல் தமிழ்ப் படம்!

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, தினமும் ‘கபாலி’ பற்றிய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த வார இறுதியில் தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சியில் பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தும்  ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘கபாலி’ படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு (படம்), கபாலி குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் கபாலி 7 மொழிகளில் வெளியாகப் போகின்றது என்பதுதான். கபாலி...
Read More

நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்!

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் தந்தையார் நீலமேகன் இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 62. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். சந்தானத்தின் சொந்த ஊரான சென்னைக்கு அருகிலுள்ள பொழிச்சலூரில் சந்தானத்தின் தந்தையாரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

நடிகர் பாலுஆனந்த் மரணம்!

விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, நடிகர் சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு மற்றும் ரசிகன் ஒரு ரசிகை, உனக்காகப் பிறந்தேன், பொட்டுவச்ச நேரம், சிந்துபாத் உள்ளிட்ட பல பங்களை இயக்கியவர் பாலு ஆனந்த். மேலும், பவர்ஸ்டார் சீனிவாசனை வைத்து ஆனந்த தொல்லை என்ற படத்தை கடைசியாக இயக்கினார். ஆனால் அந்தப் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் நிலுவையில் உள்ளது. இத்துடன் பல்வேறு தமிழ் படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனங்களை...
Read More

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் சூர்யா!

’24’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றதைத் தொடர்ந்து, மனைவி ஜோதிகா மற்றும் இரு  குழந்தைகளோடு, அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றிருந்த சூர்யா இன்று சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில், தேர்தலில் தான் வாக்களிக்க முடியாமல் போனது குறித்து, அமெரிக்காவில் இருந்தபடி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த அவர், விரைவில் ஊடகங்களைச் சந்தித்து அது குறித்த மேல் விவரங்களைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூர்யாவின் ’24’ படம் 100 கோடி வசூலித்து சாதனை!

சூர்யாவின் நடிப்பில் வெளியான ’24’ திரைப்படம் 18 நாட்களில் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்திருகிறது. கடந்த மே 6-ஆம் தேதி சூர்யா-சமந்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ’24’. விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் இப்படம் வெளியானது. சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை 70 கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க, உலகம் முழுவதும் ஸ்டுடியோ கிரீன் மற்றும் ஈரோஸ் நிறுவனம்...
Read More
error: Content is protected !!