முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

கொட்டக்கலை திடீர் பொது சுகதார பரிசோதக குழுவினர் அதிரடி நடவடிக்கை. பல வர்த்தகர்களுக்கு வழக்கு.

கொட்டக்கலை நகரில் (13/01/2020) திங்கட்கிழமை கொட்டக்கலை பொது சுகாதார பரிசோதகர் எஸ் சௌந்தர்ராகவன் தலைமையில் கொட்டக்கலை நகர் முழுவதும் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இப்பரிசோதனையின் போது உணவு பொருட்களை உணவு சட்டத்திற்கு எதிராக விற்ற வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு பாவனைக்கு பொருத்தமில்லாத உணவுகளை கைப்பற்றப்பட்ட ஸ்தலத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்கப்பட்டது.

முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி..

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா லக்கம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று (13) பகல் 12.45 மணியளவில் வீதியை விட்டு விலகி தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இருவர் காயங்களுக்கு உள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவபீட மலையகப்பகுதியினை சேர்ந்த மாணவனை காணவில்லை – பெற்றார் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கற்றுக் கொண்டிருந்த மலையகப்பகுதியினை சேர்ந்த மருத்துவ பீட மாணவனை காணவில்லை. என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 10.01.2020 இரவு 10.55 முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை கே.சின்னத்தம்பி தெரிவித்தார்.

போதை பொருட்களுடன் சிவனொளி பாதமலை வழிபாடு செய்ய சென்ற 19 இளைஞர்கள் இன்று ஹட்டன் பொலிஸாரால் கைது!!

போதை பொருட்களுடன் சிவனொளி பாதமலை வழிபாடு செய்ய சென்ற 19 இளைஞர்கள் இன்று ஹட்டன் பொலிஸாரால் கைது.

ஹட்டன் மல்லியைப்பூ காட்டுப்பகுதியில் இனந்தெரியாதவர்களால் தீ வைப்பு, பல ஏக்கர்கள் எரிந்து நாசம்!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் மல்லியைப்பூ பூ வனப் பாதுகாப்பு பிரிவில் இன்று (12) நான்கு மணியளவில் இனந் தெரியாதவர்கள் வைத்த தீ காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு வனப்பகுதியில் பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ காரணமாக இப்பிரதேசத்தில் காணப்படும் அறிய வகை உயிரினங்கள்,மற்றும் தாவரங்கள்,மருந்து மூலிகைகள் நீரூற்றுக்கள் ஆகியன அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளன. குறித்த பகுதியினை ஊடறுத்தே மகாவலி கங்கை செல்வதனால் இவ்வாற்றுக்கு நீர் வழங்கும் நீரோடைகள் ஆகியனவும் வற்றிப்போகும் நிலை உருவாகலாம். என...
Read More

போதை பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 19 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது!

போதை பொருட்களுடன் சிவனொளி பாதமலை யாத்திரை செய்ய சென்ற இளைஞர்கள் 18 ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பிரிவினாரால் நேற்று (11) திகதி தியகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு;ள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றததடுப்பிரினாரால் நேற்று (11) மாலை 3.00 மணி முதல் ஆறு மணிவரை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கேரள கஞ்சா,,ஹெரோயின்,மதன மோதக்கய,போதை மாத்திரைகள் போன்ற மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் கைது...
Read More

சிவனொளிபாதமலையை தரிசிக்க இலட்ச்சக் கணக்கான மக்கள் வருகை!!

வரலாற்று சிறறப்புமிக்க. சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் இந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்விடுமுறையை முன்னிட்டு 10.01.2020.வெள்ளிகிழமை இலட்ச்சகணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர் .

ஆயிரம் ரூபாய் சம்பள விடயம் தையில் வழி பிறக்கும் நம்பிக்கை தெரிவிக்கின்றார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இன்றைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவர் என தெரிவித்துள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தைப்பிறந்தாள் வழி பிறக்கும் என சம்பளம் விடயம் தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!