முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > நாமல் ராஜபக்ஷவின் பங்குச் சந்தை கணக்குகளை ஆராய நீதிமன்றம் உத்தரவு!

நாமல் ராஜபக்ஷவின் பங்குச் சந்தை கணக்குகளை ஆராய நீதிமன்றம் உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்குச் சந்தை நிறுவனங்கள் அனைத்து தொடர்பிலும் அறிக்கை ஒன்றை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் இலங்கை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள 5 நிறுவனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்று அவசியம் என பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் உள்ள சிக்கல்கள் மற்றும் பணம் தூய்மையாக்கல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கமைய நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!