முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > நல்லாட்சியின் ஒருவருட நிறைவு கண்டியிலிருந்து எதிர்ப்பு நடைபவனி!

நல்லாட்சியின் ஒருவருட நிறைவு கண்டியிலிருந்து எதிர்ப்பு நடைபவனி!

அரசாங்க எதிர்ப்புக்கான ஒன்றிணைந்த தேசிய முன்னணினை உருவாக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் முக்கிய கூட்டமொன்று இன்று (28) நடைபெறவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளன. இதில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான விசேட கூட்டமொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்துக்கு ஒருவருட நிறைவையிட்டு கண்டியிலிருந்து கொழும்புக்கு நடைபவனியொன்றை நடாத்த நேற்றைய கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்காக வீடுவீடாகச் சென்று மக்களை அறிவுட்டும் நிகழ்ச்சியொன்று அடுத்த மாதம் 2 ஆம் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூலை 22 ஆம் திகதி பாணந்துரைப் பிரதேசத்தில் பாரிய பொதுக் கூட்டமொன்றையும் கூட்டு எதிர்க் கட்சி நடாத்தவுள்ளதாகவும் அவ்வட்டார செய்திகள் மேலும் கூறியுள்ளன.

Leave a Reply

error: Content is protected !!