அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட மன்றாசி நகரத்தில் 5 இலட்ச ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் பஸ் தரிப்பிடத்தை உடைத்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதியொதுக்கீட்டில் மன்றாசி நகரத்தில் புதிய பஸ் தரிப்பிடம் அவசியம் என்ற மக்களின் கோரிக்கைக்கு அமைய பஸ்தரிப்பிடம் அமைக்க நிதியொதுக்கப்பட்டு வேலைகளும் நிகழ்ந்த வண்ணம் காணப்பட்டது.இந்நிலையில் குறித்த பஸ்தரிப்பிடத்தை சில விஷமிகள் (27/01/2022)உடைத்து நொறுக்கியுள்ளதோடு சந்தேகத்தின் பெயரில் நால்வர் அக்கரப்பத்தனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ் தரிப்பிடத்தை உடைத்த சந்தேகத்தின் பெயரில் குறித்த பகுதியை சேர்ந்த குலேந்திரன்,அசோக,தர்மே,ஜயந்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
நீலமேகம் பிரசாந்த், மலைவாஞ்ஞன்