அக்கரப்பத்தனை ஸ்ரீ வலம்புரி சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்.

0
106

அக்கரப்பத்தனை நகரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 23ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் பூஜை நடைபெற்றன.

மண்டலாபிஷேக பூர்த்தி விழாவும் ‌‌‌‌1008 கலாபிஷேக பெருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கா பரமசிவம் குருக்கள் தலைமையில்
12 ம் திகதி இடம்பெற்றது.

அன்று காலை 7 மணிக்கு கணபதி வழிபாடுகளுடன் ஆகுரோவா தீர்த்த குளத்தில் இருந்து பால்குடம் பவனி ஆலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து விநாயக பெருமானுக்கு தீர்த்த உற்சவம் இடம்பெற்று 1008 சங்குகளை கொண்ட சங்காபிஷேகம்

வசந்த மண்டப பூஜை இடம்பெற்தோடு அலங்கரிக்கப்பட்ட வள்ளி தெய்வானை முருகன் விநாயக பெருமான் ஸ்ரீ மகாலட்சுமி ஆகிய சுவாமிகளின் உள்வீதி வலம் வந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடன் பக்தி மயமான முத்தேர்பவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here