அக்ரஹார காப்புறுதி இழப்பீடுகள் பெறுவதில் அரச ஊழியர்கள் மிகச் சிரமம்.

0
213

அரச ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் மூலம் இழப்பீடுகளை பெறுவதற்கு பெரும் சிரமங்களை எதிர் நோக்க வேண்டிய உள்ளதாக அரச ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று ஏனைய நோய்கள் காரணமாக அரச ஊழியர் ஒரு நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலர் இழப்பீடுகளை பெறுவதற்காக முறையான விண்ணப்பங்கள் காப்புறுதி நிறுவனத்தின் ஒப்படைக்கப்பட்ட போதிலும் தாங்கள் விண்ணப்பங்களை பெற்று கொண்டோம் என தெரிவித்து ஒரு இலக்கம் மாத்திரம் வழங்கப்படுவதாகவும் குறைபாடுகள் இருப்பின் அறிவிப்பதாக தெரிவித்த போதிலும் அதனை தொடர்ந்து அந்த விண்ணப்பங்கள் தொடர்பாக எவ்வித அறிவித்தலும் கிடைப்பதில்லை என்றும் இழப்பீடுகளை பெறுவதற்காக விண்ணப்பங்கள் சமர்பித்த பலர் தெரிவிக்கின்றனர்.

குறித்த நிறுவனத்தில் தொடர்பு கொள்வதற்காக பல தொலை பேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவற்றிக்கு அழைப்பினை ஏற்படுத்தினால் அதில் எவ்வித பயனுமில்லை எனவும் குறித்த தொலைபேசிகளில் மணி ஒலி மாத்திரம் கேட்பதாகவும் வேறு எந்த பயனுமில்லை என பலர் குற்றம் சுமத்துகின்றனர்.

அக்ரஹார காப்புறுதி நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் பல வருட காலமாக தங்கம் வெள்ளி, வெண்கலம், என காப்புறுதி திட்டங்களுக்கு நிதி அறவிட படுவதாகவும் எனினும் இழப்பீடுகள் பெறப்போகும் போது எவ்வித பயனும் கிடைப்பதில்லை என்றும் இது குறித்து தொழிற்சங்கங்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த வர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பலர் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கூட நாட்டின் பிரதமர் கொவிட் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை அக்ரஹார நிறுவனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்த போதிலும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது வரை இழப்பீடுகள் முறையாக கிடைப்பதில்லை எனவும் இன்னும் சிலர் தெரிவிக்கின்றனர்.
எனவே அறிவிடப்படும் நிதிக்கு முறையாக இழப்பீடுகள் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அறவீடுகளை நிறுத்த வேண்டும் பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here