”அசிங்கப்படுத்திவிட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்க அப்பா”: நாங்க பிரிந்துவிட்டோம்! கதறும் ராஜ்கிரணின் மகள்

0
35

மிகவும் அசிங்கப்படுத்திவிட்டேன்…என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” என்று நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.

நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவை நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

இதனால் கோபமடைந்த ராஜ்கிரண், ‘பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல, இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜீனத் பிரியா பரபரப்பு வீடியோ ஒன்றை பகிர்ந்து தந்தை ராஜ்கிரணிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அது மட்டும் இல்லை, தனது கணவரை அவர் பிரிந்து விட்டதாகவும் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

“எல்லோருக்கும் வணக்கம் நான் பிரியா… ராஜ்கிரண் சாரின் வளர்ப்பு மகள்.நான் 2022ல் நடிகர் முனிஷ் ராஜாவை திருமணம் செய்தேன். அது மீடியா மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

அந்த கல்யாணத்துக்கு அப்பறம் இப்போது பிரிந்துவிட்டோம். பிரிந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது.இது சட்ட பூர்வமான திருமணம் கிடையாது. இந்த திருமணத்திற்காக என் அப்பாவை மிகவும் அசிங்கப்படுத்திவிட்டேன்.

நான் இவ்வளவு செய்த போதும் கூட, எனக்கு ஒரு பிரச்சினை என வந்த போது என் தந்தை சத்தியமாக வந்து உதவினார். இது நான் எதிர்பாராத கருணை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா என கண்ணீருடன் பிரியா கதறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here