அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இவரே போட்டியிடுவார்! இலங்கை முக்கியஸ்தர் கருத்து!

0
86

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் என எவற்றைக் கூறினாலும், இப்போதைக்கு உகந்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலே என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நடைபெறவுள்ள சிறந்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் என்று கொழும்பில் இன்று (20-12-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே (Ranil Wickremesinghe) முன்னிறுத்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here