அடுத்த போட்டிகளில் நிச்சியமாக பாதணிகளுடன் ஓடுவேன் – அகிலத்திருநாயகி

0
143

36 ஆண்டுகள் சிறை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய திருநாகி, சிறைத்துறை நடத்திய பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
அடுத்த போட்டிகளில் நிச்சியமாக பாதணிகளுடன் ஓடுவேன் – அகிலத்திருநாயகி
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அகிலத்திருநாயகி (அகிலம் அக்கா) 2 தங்கப் பதக்கங்களை அண்மையில் பெற்றுக்கொடுத்தார்.

72 வயது என்பது இந்நாட்டில் பெரும்பாலான முதியோர்கள் வீட்டில் தங்கி எந்த நோய் வந்தாலும் சிகிச்சை பெறும் காலம்.

ஆனால் இந்த வயதிலும் சாதிக்க வேண்டும் என எண்ணி, National Masters & Seniors Athletics போட்டியில் கலந்துகொண்டு இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார் அகிலத்திருநாயகி.

யார் இந்த அகிலத்திருநாயகி?

தனது 72ஆவது வயதில் ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் இலங்கைக்காக இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுத் தந்தார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில், 1500 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்களையும், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தையும், 5000 மீட்டர் நடைப் பந்தயத்தில் தகுதி விருதையும் வென்றார்.

36 ஆண்டுகள் சிறை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய திருநாகி, சிறைத்துறை நடத்திய பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.தான் சிறுவயதில் இருந்தே விளையாட்டில் சிறந்து விளங்குவதாகவும், பாதணிகள் அணிந்து போட்டி போடுவது கடினம் என்பதால், பாதணிஅணிந்து எந்த போட்டியிலும் பங்கேற்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எதிர்வரும் போட்டிகளில் காலணி அணிந்தே பங்கேற்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.வயது வந்தோருக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இலங்கைக்காக பதக்கம் வெல்வதே தனது நம்பிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here