அடுத்த 03 மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் : பேராசிரியர் வசந்த அத்துகோரல

0
60

இந்த வருடத்தின் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லாததால், தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்திலும் பொதுமக்கள் அதிக விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையினால் இதுவரையில் ஒருவர் ஒரு மாதத்தில் செலுத்திய மறைமுக வரியான 6330.00 ரூபா 3684 ரூபாயிலிருந்து 10,014.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் வசிக்கும் ஒருவர் மாதாந்தம் 14,737 ரூபா மறைமுக வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்த விடயங்களின் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளை அரசாங்கம் மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.எனவும், இதன் காரணமாக எதிர்காலத்தில் மக்கள் தமது வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்வதில் கடும் நெருக்கடி உள்ளாகலாம் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here