அட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் நீண்ட வரிசையில்… நகரில் கடும் வாகன நெரிசல்.

0
132

அட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்று (05.03.2022) நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அத்துடன், வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் நகர் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

நாடளாவிய ரீதியில் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்திலும் டீசல் இருக்கவில்லை. சுமார் 4 நாட்களுக்கு பிறகு இன்றைய தினமே டீசல் விநியோகிக்கப்படுகின்றது.

டீசல் இன்மையால் பலரின் வாகனங்கள் வீடுகளிலும், வீதிகளிலும் அப்படியே நிற்கின்றன. சுமார் 20 லீட்டர் கேன்களுடன் சாரதிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து டீசலை வாங்குவதை காணமுடிந்தது. பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஒரு சிலர் வரிசையில் நின்று, டீசலை வாங்கிச்சென்று, அதனை அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here