அட்டன் நகரில் நேற்று 15 திகதி மாலை கடும் வாகன நெரிசல் காணப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தன. அட்டன் நகரிலுள்ள எண்ணெய் நிரப்பு நிலையமொன்றிற்கு டீசல் விநியோகம் இடம்பெற்றதனை தொடர்ந்து அட்டன் கொழும்பு பிரதான வீதி, சுற்றுவட்ட வீதி, அட்டன் டிக்கோயா வீதி உள்ளிட்ட வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
குறித்த வாகன நெரிசல் காரணமாக அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் நோயாளர் காவு வண்டி மற்றும் பொது போக்குவரத்து என்பன அரை மணித்தியாலத்திற்கு மேல் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. குறித்த நெரிசல் காரணமாக சுற்றுவட்ட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றும் லொறியொன்றும் ஒன்றோடொன்று உரசி இறுகியதன் காரணமாக இந்த வாகன நெரிசல் மேலும் வலுவடைந்தன.
அதனைத்தொடர்ந்து அட்டன் போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை ஒழுங்குபடுத்தியதனை தொடர்ந்தே போக்குவரத்து வழமை நிலைமைக்கு திரும்பின.
மலைவாஞ்ஞன்