அட்டன் பஸ் டிப்போவிலிருந்து தனியார் பஸ்களுக்கு டீசல்

அட்டன் இ.போ.ச பஸ் டிப்போ மூலம் தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அட்டன் டிப்போ முகாமையாளர் டபிள்யு.ஜி.கே. கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.

அட்டனிலிருந்து குறுகிய தூர சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு வாரத்துக்கு 100 – 150 லீற்றர் டீசலை வழங்கவும் தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு தினமும் 100 லீற்றர் டீசலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன் தினமும் 20 – 30 பஸ்களுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பஸ்கள் தொடர்பான சுற்றுநிருபம், அட்டன் – தனியார் பஸ் சேவை அலுவலகத்திடமிருந்து கோரப்பட்டுள்ளது என்றார்.

க.கிஷாந்தன்