பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் மரணம் கொலை என்ற சந்தேககத்தின் பேரில் அந்த பகுதியில் மரக்கறி விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்த ஒருவரையும், பிறிதொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர் என்பது தெரிய வந்துள்ளது.
அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கீரை தோட்டத்தை அண்டிய காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.