அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்- ஜீவன் இராஜேந்திரன் தெரிவிப்பு.

0
110

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்ற நிலையில் அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலினை அறிவித்துள்ளது ஒட்டு மொத்த நாட்டு மக்களும் ஆட்சியில் இருப்பவர்கள் மீது அதிருப்தியிலேயே உள்ளனர். பொது தேர்தல் ஒன்றினை நடத்தி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு மக்கள் காத்திருக்கின்ற நிலையில் இன்று உள்ளுராட்சி தேர்தலினை அறிவித்துள்ளது இதனை மக்கள் தங்களது அதிருப்தியினை வெளிக்காட்டுவதற்காகவாவது ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று ஹட்டன் சிவாலயா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவி;க்கையில் இன்று நாட்டு மக்கள் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு உள்ளனர் அவர்கள் தேர்தலை எதிர்ப்பார்க்கவில்லை அவர்களின் ஒரே நோக்கம் ஆட்சி மாற்றமே அவ்வாறான ஒரு நிலையிலேயே அரசாங்கம் உள்ளுராட்சி வேட்பு மனுக்களை கோரியிருக்கிறது.

இந்த தேர்தலில் மக்கள் மிக தெளிவான முடிவுக்கு வரவேண்டிய நிலையிலேயே இருக்கின்றார்கள். தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற முடியாத பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டவர்கள் இருப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் தான் ஈரோஸ் ஜனநாயக முன்னணி தமிழ் மக்கள் சார்ந்து மக்களின் பிரச்சினைகளை பேசும் வகையில் இந்த தேர்தலில் களமிரங்கியிருக்கிறது. உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக மக்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகளை செவ்வனே செய்வதற்காக களமிரங்கியிருக்கின்றது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணி நுவரெலியா மாவட்டத்திலும் திருகோணமலை அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இம்முறை போட்டியிடுகிறது.
கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் மக்களுக்கு சேவை செய்திருக்கிறார்களா என்று கேள்வி எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது சாதாரணமாக சுத்திகரிப்பு பணிகளை கூட முறையாக செய்யாத சபைகள் எத்தனையோ காணப்படுகின்றது அது மாத்திரமின்றி; மக்களின் தேவைகளை அறியாது பல சபைகள் செயற்பட்டுள்ளன சபைகளில் வரிபணம் பெற்றுக்கொள்ளப்பட்டதை தவிர வேறு ஒன்றும் மக்களுக்காக செய்யவில்லை என்றே கூற வேண்டும்.

கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் காசுக்காக கட்சி மாற்றங்களை ஏற்படுத்தி பல்வேறு ஊழல்களில் ஈடுப்பட்டதனை நாம் பார்த்திருக்கின்றோம் மக்கள் சேவைகள் எவ்வாறான போதிலும் அவர்களின் சுகபோக வாழ்க்கைக்காக செயற்பட்டதனை அவதானித்துள்ளோம். இந்த தேர்தல் அரசியலில் நுழைவதற்கு ஆரம்ப தேர்தலாக இது காணப்படுகின்றமையினால் மக்கள் இதற்கு கடந்த காலங்களை போல் அல்லாது நேர்மையாக சேவையாற்றக்கூடிய நல்லவர்களை தெரிவு செய்ய வேண்டும். அத்தோடு எமது பிரச்சினைகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்வதற்கு இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக இருப்பதனால் இதனை சரியாக புரிந்து மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம் ஊழளற்ற ஒரு உள்ளுராட்சி சபையினை ஏற்படுத்த முடியும்.

அதனை செய்வதற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார். வேட்பாளர்களான ராமர் சந்திரமோகன், கணேசமணி தனுசிகா, மாரிமுத்து திருக்கேதீஸ்வரன் உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்ததுடன் மூன்று சபைகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here