லங்கா சதொச நிறுவனம் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதற்கமைய, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும், மேலும் இந்தப் பொருட்கள் நாட்டிலுள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.
இந்த விலை குறைப்பு டிசம்பர் 21 முதல் அமுலுக்கு வருகிறது.
தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் வருமாறு;
1கிலோ வெங்காயம் ரூ.185.00
1 கிலோ சிவப்பு பருப்பு ரூ.378.00
டின் மீன் (உள்ளூர்) 1 கிலோ ரூ 480.00
1 கிலோ மிளகாய் ரூ.1780.00
1 கிலோ நெத்தலி ரூ 1100.00