அந்நியச்செலவாணி ஈட்டித்தரும் தாய்மார்கள் அக்கரப்பத்தனை பகுதியில் கௌரவிப்பு

0
10

மலையகப்பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து எமது நாட்டிற்கும் வீட்டிற்கும் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக பெருமை சேர்த்த தாய்மார்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (22) ம் திகதி அக்கரப்பத்தனை மன்றாசி பகுதியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு சர்வதேச அன்னையர் தினத்தினையொட்டியே இடம்பெற்றன. இதன்போது வெளிநாட்டில் பணிபுரியும் பெண்கள் தங்களது குடும்பங்களுக்காக ஆற்றுகின்ற சேவையினையும் படுகின்ற துன்பங்களையும் இந்த நாட்டுக்கு அவர்கள் பெற்றுத்தரும் அந்நிய செலாவணி தொடர்பாகவும் பலராலும் எடுத்துக்கூறப்பட்டதுடன் எனினும் அவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க நிதியுதவிகள் நிவாரணங்கள் சென்றடையாது இருப்பது தொடர்பாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டன.

எனவே இவர்கள் தங்கள் குடும்ப வளர்ச்சிக்கு பட்ட துன்பங்கள் துயரங்களுக்காக இவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை மலைகம் சமூகம் மாற்றம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில் சமூகத்தின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு சம்பளப்போராட்டத்திற்காக சவப்பெட்டியில் படுத்து போராடிய சுப்பையா சத்தியசீலன் மற்றும் அவரது தாய் மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காலி முகத்திடலில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இராகலையிலிருந்து நடைபயணமாக சென்ற விளையாட்டுவீரர் மணிவேல் சத்தியசீலன் அவரும் அவருடன் சென்ற அவரது மனைவியும் சத்தியபிரியா இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

பிரிடோ நிறுவனத்தின் இணைப்பாளர் கே.புஸ்புராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பிரிடோ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எஸ்.கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைக்கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வின் போது வெளிநாட்டுக்கு சென்று இந்நாட்டுக்கு அந்நியச் செலவாலவாணியினை பெற்றுக்கொடுக்கும் பெண்களுக்கு உரிமையினை பெற்றுக்கொடுக்க வேண்டும் அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு வழங்க வேண்டும் போன்ற வாசகங்களை எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோசமிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் போது நடனங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் வழங்கிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள், மற்றும் கலைஞர்கள் ஆகியோருக்ககு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந் நிகழ்வுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள், கிராமசேகவகர்கள், சமய தலைவர்கள்;, நலன் விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here