அனுரவிற்கு பெரும்பான்மையை உறுதி செய்வதற்காக எனது கட்சி தேர்தலில் போட்டியிடாது! – விமல் வீரவன்ச அதிரடி அறிவிப்பு

0
37

2024 பாராளுமன்றத் தேர்தலில் தேசிய சுதந்திரக் கட்சி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு விரோதமான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் சில எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ‘இரண்டாம் கோட்டாபயவாக’ மாற்ற விரும்புகின்றன என்பதில் சந்தேகமில்லை என அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தமது கட்சி அந்த கருத்துக்கு இடமளிக்காமல், நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ள அனுமதிக்காது எனவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைப்பதற்காக தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவின்றி அனுரகுமாரதிசநாயக்க ஆட்சி புரியும் நிலையை ஏற்படுத்துவது தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச தனது விசேட அறிக்கையின பிரதிகளை மகா சங்கரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here