அனைத்துத் துறைகளிலும் பெண்களின் இருப்பு அதிகரிக்கப்பட வேண்டும்….! மகளிர் தின வாழ்த்து செய்தி.

0
119

‘அனைத்துத் துறைகளிலும் பெண்களின் இருப்பு அதிகரிக்கப்பட வேண்டும்’
இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு முன்பும் பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் ‌உருவாக்கிய‌‌ மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், அனைத்து துறைகளிலும் வெற்றி நடைபோடும் அனைத்து மகளிருக்கும் தன்னுடைய இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பெண் என்பவர் இந்த தேசத்தைக் கட்டியமைக்கும் வலிமை கொண்டவள். ஒரு குடும்பத்தை முன்னேற்றவும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பெண்களின் பங்கு என்பது அளப்பறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடப்படமிடத்து, பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் வழங்கப்படும் இடத்தில் இலங்கை காணப்படுகிறது என்றும் அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா என்பதாகும்.எனவே அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அனைத்துத் துறைகளிலும் சமஅந்தஸ்து பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்குதாரர்களாக பெருந்தோட்டப் பெண்கள் உள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது.

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும். அத்தகைய மாற்றத்தின் தொடக்கமாக நம்முடைய இல்லங்கள் அமையட்டும்.

பெண்களை மதித்து கொண்டாடுவதுடன் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவதையும் நாம் அனைவரும் நம்முடைய வீடுகளிலிருந்து தொடங்குவோம் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here