அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழமை போன்று இன்று (25) சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி தெரிவித்துள்ளார்.
அரச தொழிலில் உள்ள நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கான சம்பளத்தில் தாமதம் ஏற்படலாம் என இதற்கு முன்னர் கூறப்பட்டிருந்தது.