அபாயா மற்றும் பர்தா அணிந்து கடமையாற்ற அனுமதி..!

0
45

புதிதாக நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் 9 பேர்,

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமைக்கு சென்ற போது,

கடமைக்கு அறிக்கை செய்ய விடாது தடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் நேற்று (10) இடம்பெற்றிருந்தது.

புதிய நியமனம் பெற்ற குறித்த பெண் உத்தியோகத்தர்களும் தங்களது கலாசார மற்றும் மத நடைமுறைக்கு அமைவாக பர்தா அணிந்த நிலையில்,

வைத்தியசாலைக்கு கடமையேற்கச் சென்றுள்ளனர்.

எனினும், அவர்கள் கடமைக்கு அறிக்கை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுவந்த நிலையில்,

குறித்த 9 பெண்களும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தனர்.

இன்று அதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் 9 பேரையும் அபாயா மற்றும் பர்தா அணிந்து கடமையாற்ற,

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இன்று (11) செவ்வாய்க்கிழமை அனுமதித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here