அபிதா நிறுவனத்தின் கல்விக்கான மகத்தான சேவை.

0
9

அபிதா நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் கல்வி வளர்ச்சிக்கு அளப்பரிய சேவை செய்து வருகின்றது.பூண்டுலோயா சீன் விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயத்தின் சாதாரண தரத்தில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றது.

அபிதா நிறுவனத்தின் தலைவர் தேசபந்து பெ. ராஜேந்திரன் ஊடாக இச்சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.சீன் விவேகானந்தா பாடசாலையின் ஆசிரியர் கோபால் அவர்களின் கீழ் நடைபெறும் இந்த கருத்தரங்கின் ஊடாக பல மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.இம்முறையும் கடந்த வாரங்களில் விசேட கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

அபிதா நிறுவனத்தின் இச்சேவையால் பாடசாலையில் அதிக புள்ளிகள் பெற வாய்ப்புகிட்டியுள்ளதாக ஆசிரியர் கோபால் தெரிவித்ததோடு தொடர்ந்தும் இச்சேவை கிடைக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.மேலும் அபிதா நிறுவனத்தின் தலைவர் தேசபந்து பெ.ராஜேந்திரன் பரீட்சையை எதிர்நோக்கவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here