அமெரிக்கா – கனடா மக்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

0
78

அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் ஜாம்பி மான் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் இந்த ‘ஜாம்பி மான் நோய் பரவுகிறது. பொதுவாக ஆரோக்கியமான மூளை புரதங்கள் ப்ரியான் மூலம் அசாதாரணமாக அதிகரிக்கிறது.

இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்களை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.

இந்த தொற்று நோய்கள் பாதிக்கப்பட்ட இறைச்சியை உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் உள்ள Yellow Stone தேசிய பூங்காவில் உயிரிழந்த மானுக்கு நாள்பட்ட கழிவு நோய் (CWD) இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் 32 மாகாணங்கள் மற்றும் கனடாவின் 4 மாகாணங்களில் இந்த ஜாம்பி மான் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதன்படி மத்திய மேற்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் மாகாணத்தில் அதிக பாதிப்புகள் உறுதியாகி உள்ளன.

கன்சாஸ், நெப்ராஸ்கா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.மான் மற்றும் தொடர்புடைய உயிரினங்களில் எடை இழப்பு, ஒருங்கிணைப்பு இழப்பு மற்றும் பிற இறுதியில் ஆபத்தான நரம்பியல் அறிகுறிகளை ஏற்படுத்தும்.

அமெரிக்க தேசிய பூங்கா சேவை மையம், இந்த நோய் மனிதர்கள் அல்லது வீட்டு விலங்கு இனங்களை பாதிக்கும் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என கடந்த மாதம் தெரிவித்தது.எனினும் பாதிக்கப்பட்ட விலங்குகளின் திசுக்களை உட்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.’

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, குரங்குகள் உட்பட மனிதரல்லாத விலங்குகளுக்கு இந்த நோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here