அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி

0
41

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளதாக பொக்ஸ் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேசத்தின் சக்தி மிகுந்த நாடான அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளிாயக கமலா ஹாரிஸும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனா்.

தொடக்கம் முதலே இருவரும் கடுமையான பிரச்சார யுக்திகளை கையாண்டனா். அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இருந்தது. இதனால் டிரம்ப் தனது பிரச்சார முறையை மாற்றினார். டிரம்ப்பிற்கு ஆதரவாக உலக பணக்காரரான எலான் மஸ்க் களம் இறங்கி கடுமையாக பிரச்சாரம் செய்தார். இருவருக்கும் இடையே கடுமையான பிரச்சார போட்டி நிலவியது.

இதற்கு இடையே நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் வெற்றி பெறும் வேட்பாளரே ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்பது விதியாகும்.

கலிபோர்னியா மாகாணத்திற்கு அதிகபட்சமாக 54 வாக்குகள் உள்ளன. ஒரு மாகாணத்தில் எந்த ஜனாதிபதி வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளை பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். அமெரிக்காவின் ஸ்விங் மாகாணங்களாக அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், வடக்கு கரோலினா ஆகியவை அழைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் இறுதியான நிலையில், டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார். தனது போட்டியாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் 2 வது முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here