இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி ஜியூன் சங் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைப்பெற்றது.
இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இந்தச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு அமெரிக்கா உதவி வழங்க வேண்டும் என இதன்போது இ.தொ.கா அமெரிக்க தூதுவரிடம் கோரிக்கை விடுத்தது.
அத்துடன், இலங்கைகான அமெரிக்காவின் பொருளாதார, கலாசார, சமூக ரீதியான உதவித்திட்டங்களில் எதிர்காலத்தில் மலையக மக்கள் உள்வாங்கப்பட வேண்டும் என இ.தொ.கா அமெரிக்க தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்தது.
மேலும் உலக வங்கி, IMF இலங்கைக்கு உதவி வழங்குவதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.