அமைச்சர் ஜீவன் எட்டாம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

0
117

பதுளை, எட்டாம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குறைப்பாடுகளை வெகுவிரைவில் நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், எட்டாம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அண்மையில் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அங்கு நிலவும் சில குறைப்பாடுகள் சம்பந்தமாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இவற்றை உடன் நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சர் உடன் பணிப்புரை விடுத்தார்.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here