அயோத்தியில் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு அனுமதி மறுப்பு..!

0
45

உத்தர பிரதேசம் அயோத்தியில் நேற்று நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று காலை திறப்பு விழா நிகழ்விற்கு தொழிலதிபர்கள் முதல் பிரபலங்கள் வரை அயோத்தியில் குவிந்தனர். 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.

இந்த திறப்பு விழா நிகழ்விற்கு ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, அண்ணன் சத்யநாராயணா மற்றும் பேரன்களுடன் நேற்று அயோத்தி சென்றார். இவருடன் நடிகர் தனுஷூம் சென்றார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், அயோத்தியில் விஐபிகளுக்கு ஒதுக்கப்பட்ட வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்தார்.ஆனால், அவருடன் மனைவி லதா, அண்ணன், பேரன்கள் எவரும் அமரவில்லை. அப்போது, முன்வரிசையில் தனது குடும்பத்தினரை அமர வைக்காததை கவனித்த ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து பேசினார்.

இதையடுத்து, அவரது குடும்பத்தார் உள்ளே வந்து ரஜினிகாந்த் அருகே அமர்ந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here