அரசாங்கத்தை ஆட்டம் காட்ட வேண்டுமென்றால் வீதியில் இறங்கி போராடுவதை விட்டுவிட்டு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்’

0
43

அரச ஊழியர்கள் வரியினை குறைக்குமாறும் மின் பட்டியலை குறைக்குமாறும் கோரி சுலோகங்களை ஏந்திக்கொண்டு போராடுகின்றனர். இதனால் அரசாங்கத்திற்கோ அமைச்சர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்பட போவதில்லை.

ஆகவே இந்த அதிகரிக்கப்பட்ட வரியினை அறவிடுபவர்கள் வங்கி ஊழியர்கள் ,அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தினை அறவிடுபவர்கள் மின் சாரசபை ஊழியர்கள் ஆகவே அவர்கள் நினைத்தால் மக்களுக்கு பாதிக்கப்படும் எந்த ஒரு கட்டணத்தினையும் அறவிடாது இருந்தால் அது அரசாங்கத்தையும் பாதிக்கும் மக்களுக்கு நன்மை செய்ததாக இருக்கும் என அருணலு மக்கள் முண்ணனி தலைவர் டாக்டர் கே.ஆர்.கிஷான் தெரிவித்தார்.

ஹட்டன் பகுதியில் இன்று (3) திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த 1ம் திகதி வங்கி ஊழியர்கள், வைத்தியசாலை விசேடமாக இலங்கை மின்சார சபை போன்ற அனைத்து அரசாங்க நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். எனக்கு தெரிந்தவரை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஒருபோதும் அரசாங்கத்தை ஆட்டம் காட்ட முடியாது. ஏனென்றால் அரசாங்கம் ரணில் விக்ரமசிங்க அவர்களோ அல்லது அங்குள்ள அமைச்சர்களோ இந்த வேலைத்திட்டத்தால் பாதிக்கப்படப்போவதில்லை. வங்கி மூடுவதால் அவர்கள் பாதிக்கப்படுவதுமில்லை. இதில் பாதிக்கப்படுவது பொதுமக்;கள் தான். ஏனென்றால் அவர்களுக்கு வருத்தம் வந்தால் அவர்களை பார்க்க வைத்தியர்கள் இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் தேவையானளவு அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஜனாதிபதி மாளிகையிலும் அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஆகவே இந்த வேலைநிறுத்தம் விசேடமாக பொலிஸார், பாதுகாப்பு படையினருக்கும் மக்களுக்கும் இடையில் பிரச்சினையையே ஏற்படுத்துகிறதே தவிர இந்த வேலைநிறுத்தத்தினால் எந்தவொரு நன்மையும் மக்களுக்கு இல்லை. இதற்கு ஒரு உதாரணத்தை கூற விரும்புகிறேன் கடந்த 28ம் திகதி மக்கள் வங்கி தலைவரும் இலங்கை வங்கி தலைவரும் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் நாங்கள் அரசாங்க வங்கிகள். நீங்கள் அனைவரும் வேலைக்கு போக வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் ஒருவரும் வேலைக்கு போகவில்லை. வங்கிகள் ளவசமைந இல் இருந்தன.

அதேபோல் அருணலு மக்கள் முண்ணனி தலைவர் என்ற ரீதியில் மக்களுக்கு நான் கூறவிரும்புவது மக்கள் தொடர்ந்து விலைவாசியிலும் , மருத்துவம், மருந்து , அரகல , வேலைநிறுத்தம் எதை எடுத்துக்கொண்டாலும் பாதிக்கப்படுவது பொதுமக்களே ஆகும். அரசாங்கம், அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பெரிய உத்தியோகத்தர்கள், ஆளுனர்கள் இதில் பாதிக்கப்படுவதில்லை. இதில் நல்ல பாடம் படிப்பிக்கவேண்டுமாயின் எதிர்காலத்தில் வசயனந ரnழைn , தொழிற்சங்கங்கள் மக்களை பாதிக்கின்ற விடயங்களை செய்யாதிருந்தாலே அரசாங்கம் ஆட்டம் கண்டுவிடும்.

இதே நேரம் தேர்தல் வைக்கப்போகிறோம், தபால் வாக்கெடுப்பு நடத்தப்போகிறோம், இதோ தபால் வாக்கெடுப்புக்கு திகதி என்றெல்லாம் அறிவித்து விட்டார்கள். அதனால் இன்று பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. சில கட்சிகள் பிரசார வேலைகளையும் தொடங்கியுள்ளது பாதி ஆவனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது லட்சக்கணக்கில் செலவு செய்த பின் தேர்தல் திணைக்களத்தில் எத்தனையோ கட்சி செயலாளர்களுக்கு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நாங்கள் டொலர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளோம் இந்நிலையில் ஜனாதிபதி அவர்கள் தேர்தலும் இல்லை சல்லியுமில்லை என்று நகைச்சுவையாக சொல்கிறார் ஒரு ஜனாதிபதி இவ்வாறு பேசக்கூடாது இவர் இந்நாட்டின் தலைவர் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டாரோ மந்திரியால் தெரிவு செய்யப்பட்டாரோ எவ்வாறான போதிலும் இந்நாட்டின் தலைவர் என்பதனை அறிந்து பேச வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

மலைவாஞ்ஞன் ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here