அரச அதிகாரிகளின் 2000 வாகனங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தபடுவதாக தகவல்

0
67

இந்த புலனாய்வு அறிக்கை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அரசியல்வாதிகள், பொலிஸ், ஆயுதப்படை மற்றும் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 2000 உத்தியோகபூர்வ கார்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகளால் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெருமளவு பணம் விரயமாகி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில அரசியல்வாதிகள் தங்களது தனியார் வாகனங்களை தாம் பணிபுரியும் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடும்போது அவற்றை உத்தியோகபூர்வ வாகனங்களாக பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தியோகபூர்வ வாகனங்கள் பிரதானிகளின் மனைவிகள் மற்றும் பிள்ளைகளின் பாடசாலை பயணங்களுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதாக புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

பாதுகாப்புப் படையினரின் சாரதிகள் குடும்ப உறுப்பினர்களின் பயணங்களுக்கும் அரசாங்கத்தினால் பிரதானிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளைப் பயன்படுத்துவதாலும் இந்த இழப்பு இரட்டிப்பு மூன்று மடங்காக அதிகரிப்பதாக தெரிவிக்கின்றன.

மேலும், இந்த புலனாய்வு அறிக்கை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here