அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்வைக்கப்படவுள்ள நிவாரண வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சு தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களின் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.