அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

0
112

தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டி பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தற்போது அரச சேவையில் கடமையாற்றும் பட்டதாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக வரத்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்திற்கு ரூபா 2,700 பரீட்சை கட்டணமாக செலுத்தப்பட வேண்டும் என்பதோடு பரீட்சையில் பெறும் புள்ளிகளின் அடிப்படையிலேயே நேர்முகப் பரீட்சை நடைபெற்று நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.

குறித்த பட்டதாரி ஆசிரிய வெற்றிடங்களுக்கு சாதாரண அதாவது தற்போது அரச சேவையில் இல்லாத பட்டத்தாரிகள் விண்ணப்பிக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே உரிய வர்த்தமானியில் தரப்பட்டுள்ள அறிவுத்தல்களை முறையாகவும் தெளிவாகவும் வாசித்து அதன் அடிப்படையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here