அரச சேவையில் சிலர் வாழ்ந்தாலும் பிணங்களாகவே இருக்கின்றனர்- திருமதி பிரேமசிங்க தெரிவிப்பு

0
98

அரச சேவையில் இன்று பலர் வாழ்ந்தாலும் பிணங்களாகவே இருக்கின்றனர் அவர்கள் மக்களின் எண்ணங்களையும் வேதனைகளையும் அறிவதில்லை ஆனால் அரச சேவையில் இருந்து கொண்டு வீட்டுக்கும் சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் வாழ்வது என்பது இந்த காலகட்டத்தில் சாதாரண விடயமல்ல அதனை இன்று ஓய்வு பெறும் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர் ராமன் ராஜராம் அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார் என்பது காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவே ஓய்வு பெற்றாலும் சமூகத்திற்காக இணைந்து செயப்பட வேண்டும் என தலவாக்கலை பிரதேச செயலகத்தின் செயலாளர் திருமதி பிரேமசிங்க தெரிவித்தார்.
சமூர்த்தி உத்தியோகஸ்த்தர் ராமன் ராஜராம் அவர்களின் ஓய்வும் மணிவிழாவும் நேற்று மலையக மக்கள் சக்தியின் தலைவர் ராமன் செந்தூரன் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் திருமதி பிரேமசிங்க தலைமையில் தலவாக்கலையில் 02ஆம் திகதி மாலை நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் நாம் அரச சேவைகளை முன்னெடுக்கும் போது எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி மக்களின் நலன் கருதி அவர்களின் தேவைகளையும் துன்பங்களையும் உணர்ந்து செயப்பட வேண்டும் அந்த வகையில் ராஜாராம் அவர்கள் தனது சேவை காலத்தில் எவ்வித முறைபாடுகளும் இன்றி நல்ல முறையில் தனது சேவையினை செய்துள்ளார் என்பதையும் அவர் தொடர்பான எந்த வித குற்றச்சாட்டுகளும் இது வரை பதிவானதில்லை அது மாத்திரமின்றி அவர் தனது சேவையுடன் நின்று விடாது பல சமூக மக்களுக்கு உதவக்கூடிய பல சமூக சேவைகளையும் முன்னெடுத்துள்ளார் ஆகவே இன்று எவறாவது ஓய்வு பெற்றால் அவருடன் வேலை செய்தவர்கள் மாத்திரம் அழுது புலம்பி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள் ஆனால் அவ்வாறு இல்லாது தனது குடும்பத்தில் உள்ளவர்கள் முன்வந்து எங்களையும் அழைத்து அனைத்து அரச ஊழியர்களையும் அழைத்து இவ்வாறு ஒரு விழா செய்திருப்பது நான் கலந்து கொண்டது இதுவே முதல் தடைவை இது தொடர்ந்து நடைபெற வேண்டும் காரணமாக சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர்களுக்கு இவ்வாறு விழா எடுப்பதன் மூலம் அவர்களுக்கு அது மகிழ்;ச்சியாக அமையும் அதே ஏனையவர்களையும் அது ஊக்கப்படுத்தும் எனவே இதனை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துகொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்;.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்;தரம் கற்ற அவர் 1997 ம் ஆண்டும் சமூர்த்தி உத்தியோகஸ்த்தராக கிறிலஸ்பாம் பகுதியில் தனது முதல் நியமனத்தினை ஏற்று இது வரை காலம் தனது பணியினை செவ்வனே செய்த அவர் ஆரம்ப காலப்பகுதியில் மலையக மக்களின் அரசியல் பிரவேசத்திற்காக மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து ஒரு செயப்பாட்டாளராகவும் செயப்பட்டுள்ளார் இவர் தனது உழைப்பில் ஒரு சிறிய அளவினை ஏழை எளிய மாணவர்களுக்கும் வறிய குடும்பங்களுக்கும் வழங்கி உதவி செய்துள்ளார்.
அது மாத்திரமன்றி மலையகத்தில் நடைபெற்ற பல சமூக நலன் சார்ந்த போராட்டங்களுக்கு சென்று சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.

சமூர்த்தி வங்கிகளை மலையகப்பகுதிகளின் ஸ்தாபிப்பதில் முன்னின்று உழைத்துள்ளார் இவ்வாறான ஒருவர் ஓய்வு பெறுவது மிகவும் கவலைக்குரியது என இங்கு உரையாற்றிய பலர் தெரிவித்தனர்.

இதன் போது அவருக்கு நினைவுச்சின்னங்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த விழாவில் தலவாக்கலை செயலகத்தின் உதவிச்செயலாளர் சிரோமி ரத்நாயக்க தலவாக்கலை லிந்துலை சமூர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகஸ்த்தர்கள், கிராம சேவகர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here