அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான சிறார்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தினசரி உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காக அரசாங்கம் ரூ.1600 கோடி செலyவிடவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு 110 ரூபாவை கட்டாயம் செலவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார் .