பதுளையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணிக்க தயாராக இருந்த இபோச பஸ்ஸில் ஏறிய பெண்ணொருவர் மீது நடத்துனர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
பதுளை – பசறை, 3 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 39 வயதான குறித்த பெண்ணின் நெஞ்சு பகுதியை பிடித்து நடத்துனர் தள்ளியுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வைத்தியசாலைக்கு மருந்து எடுப்பதற்காக வருகை தந்த பெண்ணே இவ்வாறு பஸ்ஸில் இருந்து தள்ளப்பட்டுள்ளார். இது தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் வினவியபோது, ரிக்கெட் மெசினால் கணவர்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனை தாக்குதலுக்குள்ளான தம்பதியின் மகன் வீடியோ எடுக்க முற்பட்டுள்ளார். பின்னர் தொலைபேசியை பறித்து காணொளிகளையும், படங்களையும் அழித்துள்ளனர்.
இந்நிலையில், உடம்பு சரியில்லை, கால் வலி என்பதால்தான் பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்தேன். இறங்குமாறு பலவந்தப்படுத்தினர், பின்னர் நெஞ்சு பகுதியை பிடித்து நடத்துனர் தள்ளினார் எனவும் பாதிக்கப்பட்ட பெண் மலையக குருவியிடம் தெரிவித்தார்