அராஜாக அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.லெட்சுமனார் சஞ்சய் தெரிவிப்பு

0
81
பதுளை பூனாகலை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் இமானுவேல் தேவநாயகம் தாக்கப்பட்ட விடயம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறான அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில் ஆசிரியர்கள் என்பவர்கள் அறிவு கண்ணை திறப்பவர்கள் அதே போல சமூகத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்பவர்கள் இப்படியிருக்கையில் பாடசாலை வளாகத்தினுள்ளே சென்று ஆசிரியரை தாக்கும் அநாகரிகமான வேலையை செய்த ஹல்தமுல்ல பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார் சட்டத்தின் முன் தண்டிக்கப்படவேண்டும்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியரிடம் வினவினோம் அவர் கூறிய விடயங்கள் மிக மனவருத்தத்தை அளித்துள்ளது.காலநிலை சீர்கேற்றால் பாதிக்கப்பட்ட பாடசாலையை பார்க்க சென்ற தருணமே இவ்வாறு மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.அதேநேரத்தில் தாக்கிய போது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அருகில் இருந்ததாகவும் தன்னை தாக்கும் போது அவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் குறிப்பிட்டார்.
எனவே இவ்வாறான விடயங்களை மலையக மக்கள் முன்னணி பார்த்து கொண்டிருக்க முடியாது.எனவே இவ்வாறானவர்களை சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு சட்டத்தின் முன் நிறுத்த முன்வர வேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணி அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
பிரசாந்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here