அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்…!

0
14

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ நாடு அரிசி 220 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உச்சபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நாடு முழுவதிலும் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தனியொரு வர்த்தகர் இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஐந்து லட்சம் ரூபா அபராதமோ, ஆறு மாத கால சிறைத்தண்டனையோ அல்லது இந்த இரண்டு தண்டனைகளோ விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் தனியார் நிறுவனமொன்றுக்கு ஐந்து லட்சம் முதல் ஐம்பது லட்சம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here