அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால், அரிசி இறக்குமதியை இடைநிறுத்துமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதிபரை சந்தித்த போதே விவசாய அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.எனினும் உள்நாட்டு அரிசியின் விலை தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.