மலையக மக்கள் தற்போது அவதானமாக செயற்பட வேண்டிய காலமிது காரணம் காலநிலை தற்போது மிக ஆபத்தான நிலையில் உள்ளது எனவே தத்ததமது உறைவிடங்களையும் வேலை செய்யும் போது வேலைத்தளங்களிலும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபத்தலைவர் சச்சுதானந்தான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் காலநிலை மாற்றத்தால் பல அபாயகரமான விடயங்கள் மலையகத்தில் இடம் பெற்றுள்ளது.அலட்சியமாக செயற்பட்டமையினால் வெள்ளப்பெருக்கில் ஒரு சில இடங்களில் பலர் உயிர்துறக்க நேரிட்டது.அதேபோல தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் போது சில உயிர்கள் பறிபோன அவதூறான சந்தர்ப்பங்களும் உருவாகின எனவே மலையகம் மழைக்காலங்களில் அதிகமாக இயற்கை சீற்றத்துக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவே அவற்றை அலட்சியமாக எண்ணாமல் அவதானமாக செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகுமென இ.தொ.கா உபத்தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்தார்.
நீலமேகம் பிரசாந்த்