அலைபேசியை காண்பித்த ஆசிரியர் கைது

0
82

ஓபநாயக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் குழுவொன்றிற்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான காணொளிகளை காண்பித்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் சுமார் 15 பாடசாலை மாணவிகளிடம் அவ்வப்போது இந்த ஆபாச காட்சிகளை காண்பித்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக பெற்றோருக்கு கிடைத்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி சந்தேத்தின் பேரில் ஆசிரியரை கைத்தொலைபேசியுடன் கைது செய்தனர். சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here