அவதானம் மக்களே; சாஸ்திரம் கூற வரும் பெண்ணை நம்பாதீர்கள்!

0
23

மன்னார் நானாட்டான் நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் சிறுவனுடன் சென்ற பெண் ஒருவர் சாத்திரம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து தாலிக்கொடியை திருடி சென்ரூள்ளார்.

சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய தாலிக்கொடி (நகை) திருடிச் சென்றுள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை (25) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ,குறித்த வீட்டிற்கு சிறுவனுடன் சென்ற பெண் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். வீட்டார் பணம் வழங்கிய நிலையில் குடிக்க நீர் கேட்டுள்ளார்.

குடிக்க நீர் கொடுத்த பின்னர் தான் சாத்திரம் பார்த்து கூறுவதாக கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கும் சாத்திரம் பார்த்துள்ளார்.இதன் போது குறித்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து பூசி வீட்டிலிருந்த பெண் அணிந்திருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச் சென்றுள்ளார்.

அதனையடுத்து மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு சுய நினைவு திரும்பிய நிலையில் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை சந்தேகிக்கப்படும் குறித்த பெண் சிறுவனுடன் குறித்த வீதியால் சென்ற CCTV விடியோ கட்சியும் வெளியாகி உள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here