அவர் என தந்தை போன்றவர், தோனி தொடர்பாக பதிரன மனம் திறந்தார்

0
67

மதீஷ பதிரன இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தும் மாலிங்க சாயலில் பந்து வீசும் சிறப்பான இளம் வீரர் ஆவார் . இந்த நாட்களில் அவர் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் பதிரன சென்னை உட்பட இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான இளம் வீரராக மாறியுள்ளார்.

இலங்கை ஒருவராக இருந்தும் சென்னை மக்கள் இவரை கொண்டாடி வருகின்றனர் .

இறுதி ஐ.பி.எல் தொடரில் விளையாடும் தோனி பதிரனவை இனம் கண்டு சிறப்பாக வழி நடத்தி வருகின்றார் . சென்னை அணிக்காக வழங்கிய செவ்வி ஒன்றின் போது பதிரன தோனி தொடர்பாக கருத்து வெளியிட்டு இருந்தார் .

“என் தந்தைக்குப் பிறகு, கிரிக்கெட் உலகில் எனது தந்தை தோனி ஆவார் . எப்போதும் என்னைப் பாதுகாத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்துகிறார்” என தெரிவித்துள்ளார் .

மேலும் ,

நான் வீட்டில் இருக்கும் போது, ​​என் தந்தையுடன் இருப்பது போன்று அவருடன் இருக்கும் உணர்வதாகவும் பதிரன குறிப்பிட்டுள்ளார் .

நாங்கள் நிறைய விடயங்களை கதைக்க மாட்டோம் . ஆனால் சின்னச் சின்ன விஷயங்களைச் சொல்லி நிறைய வித்தியாசங்களை தோனி உண்டு பண்ணுவார். வீரர்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். களத்திற்கு வெளியே, நாங்கள் அதிகம் பேசுவதில்லை, ஆனால் நான் அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நிச்சயமாக நான் அவரிடம் சென்று அவரிடம் கேட்பேன் ”என்று பதிரன கூறியுள்ளார் .

இறுதியாக மகேந்திர சிங் தோனியிடம் கோரிக்கை ஒன்றையும் புதிரன முன்வைத்துள்ளார் .

“மஹி பாய் உங்களால் இன்னும் ஒரு ஐ.பி.எல். சீசன் விளையாட முடிந்தால் எங்களுடன் விளையாடு இணைந்த விளையாடுங்கள் . நானும் இங்கே இருந்தால்”

என குறித்த நேர்காணலின் போது மதீச பதிரன கேட்டுக்கொண்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here