அவுஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று

0
62

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் தொடரை 3-1 தன்வசப்படுத்திக்கொள்ள முடியும். அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியானது தென் ஆப்பிரிக்காவில் உள்ள Super Sport Park மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 4.30க்கு நடைபெறவுள்ளது.

கடந்த ஏழாம் திகதி நடைபெற்ற இரு அணிகளும் இடையிலான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து ஒன்பதாம் திகதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 123 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா அணி 2-0 என முன்னிலை வகித்தது.

கடந்த 12ம் திகதி நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் 2-1 என தொடர்கிறது.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் தொடரை 3-1 தன்வசப்படுத்திக்கொள்ள முடியும்.

தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என சமநிலையில் தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here