அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக குவிந்த பெருமளவு மக்கள் – வெளியானது காரணம்

0
40

தோல் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு கலைப் படைப்பில் பங்கு பெறும் வகையில் அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிர்வாண கோலத்தில் தோன்றியுள்ளனர்.

புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் கலைஞர் ஸ்பென்சர் துனிக்கின் கலைப் படைப்பிற்காக பொது நிர்வாணத்தை அனுமதிக்க உள்ளூர் சட்டங்கள் மாற்றப்பட்ட வேண்டி இருந்தது. அதனடிப்படையில் காலை 3:30 மணிக்கு பெரும் திரளான பங்கேற்பாளர்கள் கடற்கரையில் ஒன்று திரண்டு, கலை படைப்பிற்காக தங்கள் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக காட்சியளித்தனர்.

புகைப்படம் எடுப்பதை அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட்டு இருந்தாலும், பங்கேற்பாளர்கள் காலை 10 மணி வரை மட்டுமே கடற்கரையில் நிர்வாணமாக இருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் காலை 7 மணிக்கே கலைப் படைப்பிற்கான வேலைகள் முடிவடைந்து மக்கள் அனைவரும் நிர்வாண கோலத்தில் இருந்து உருமாறினர்.

இந்த கலைப் படைப்பானது அவுஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் தோல் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிர்வாண கலைப் படைப்பில் நிர்வாணமாக தோன்றிய 2,500 மொடல்களும், ஒவ்வொரு ஆண்டும் அவுஸ்திரேலியாவின் தோல் புற்றுநோயில் இறக்கும் நபர்களின் எண்ணிக்கையை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரத்தில் ஸ்கின் செக் சாம்பியன்ஸ் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த கலைப்படைப்பு உருவாக்கப்பட்டது.

இது தொடர்பாக கலைப் படைப்பாளர் ஸ்பென்சர் துனிக்கின் தெரிவித்த கருத்தில், “தோல் நம்மை ஒன்றிணைக்கிறது மற்றும் நம்மைப் பாதுகாக்கிறது, எனது படைப்பை உருவாக்க நான் அற்புதமான உடல் வகைகள் மற்றும் தோல் டோன்களைப் பயன்படுத்துகிறேன், எனவே எனது ஊடகம் நிர்வாண மனித வடிவம் என்பதால் இந்த முயற்சியில் பங்கேற்பது மிகவும் பொருத்தமானது எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் “தோல் பரிசோதனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, இங்கு வருவதற்கு நான் பெருமைப்படுகிறேன், எனது கலையை உருவாக்கி, உடலையும் பாதுகாப்பையும் கொண்டாடுங்கள்” என்று துனிக் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 ம் ஆண்டு தோல் புற்றுநோய் விழிப்புணர்வுடன் பின்னிப்பிணைந்த மற்றொரு திட்டமான சிட்னியின் உலகப் புகழ்பெற்ற ஓபரா ஹவுஸின் படிகளில் 5,200 நிர்வாண மக்களை இவர் புகைப்படம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் அவுஸ்திரேலியாவை தோல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here