அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பம் கோரல் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பில், மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர்களுக்கு தெளிவூட்டுவதற்கான கலந்துரையாடல் ஒன்று, இன்றைய தினம் நிதியமைச்சில் இடம்பெற்ற போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.முதலாம் கட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பதன் ஊடாக, இரண்டாம் கட்டத்தை நிறைவுறுத்தும் போது, 24 லட்சம் பேருக்கு அஸ்வெசும நலன்புரி திட்டத்தை வழங்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு எந்தவொரு மட்டத்திலும் உள்ள எந்தவொரு நபரும் விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.