அஸ்வெசும கொடுப்பனவு பயனாளிகளுக்கு ஏற்படும்அநீதிகளை கண்டறிய விசேட குழு

0
73

‘அஸ்வெசும’ சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக, குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குழுவின் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு உரிய குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here